ப்ளாக்கில் ஆடியோ ஃபைல்களை இணைக்க..






சில தளங்களுக்கு சென்றால் பின்னணியில் இசை ஒலிப்பதை கேட்கலாம். அது போன்று நமது தளத்திலும்  ஆடியோ  ஃபைல்களை இணைப்பது எப்படி? என்று இந்த பதிவில் காண்போம். அவ்வாறு இணைப்பதற்கு Embed என்ற முறை பயன்படுத்தப்படுகிறது.

ஆடியோ ஃபைல்களை ஒலிக்க வைக்க:

*முதலில் உங்களுடைய ஆடியோ ஃபைலை, இலவசமாக ஃபைலை upload செய்ய அனுமதிக்கும் தளங்களில் (உதாரணத்திற்கு, http://sites.google.com) upload செய்துக் கொள்ளுங்கள். பிறகு அந்த ஆடியோவின் முகவரியை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த முகவரி .mp3, .wav, அல்லது .midi என்று முடிய வேண்டும்.

*நமக்கு விருப்பமான பாடல்களை அல்லது ஒலி கோப்புகளை நமது தளத்தில் sidebar-ல் ஒலிக்க செய்ய கீழுள்ள Code-ஐ பயன்படுத்தவும்.




<embed width="250" height="50" autostart="false" loop="true"src="https://sites.google.com/site/guide4bloggers/bnfiles/01TitleTrack.mp3"/></embed>
மேலுள்ள code-ல் உங்களுக்கு ஏற்றவாறு மாற்றங்கள் செய்ய,

width - என்ற இடத்தில் உங்களுக்கு ஏற்றவாறு அகலத்தின் அளவை மாற்றலாம்.

height - என்ற இடத்தில் உங்களுக்கு ஏற்றவாறு உயரத்தின் அளவை மாற்றலாம்.

autostart - என்ற இடத்தில், தானாக ஒலிக்க வேண்டுமென்றால் "true" என்றும், manual-ஆக ஒலிக்க செய்ய வேண்டுமென்றால் "false" என்றும் கொடுக்கவும்.

loop - என்ற இடத்தில், பாடல்கள் திரும்ப, திரும்ப ஒலிக்கச் செய்ய "true" என்றும், ஒருமுறை மட்டும் ஒலிக்கச் செய்ய "false" என்றும் கொடுக்கவும்.

src - என்ற இடத்தில் உங்கள் ஆடியோ ஃபைலின் முகவரியை கொடுக்கவும்.

மேலே நான் கொடுத்துள்ள Code-ன் Output பின்வருமாறு இருக்கும்.







பின்னணியில் ஒலிக்கச் செய்ய:

பின்னணியில்  பாடல்கள் போன்ற ஆடியோ ஃபைல்களை ஒலிக்கச் செய்ய 


<head>
என்ற  Code-ஐ தேடி அதற்கு பின்னால், பின்வரும் Code-ஐ paste செய்யவும்.


<embed autostart="true" height="0" loop="true" src="https://sites.google.com/site/guide4bloggers/bnfiles/01TitleTrack.mp3" width="0"/>

* loop - என்ற இடத்தில், பாடல்கள் திரும்ப, திரும்ப ஒலிக்கச் செய்ய "true" என்றும், ஒருமுறை மட்டும் ஒலிக்கச் செய்ய "false" என்றும் கொடுக்கவும்.

* src - என்ற இடத்தில் உங்கள் ஆடியோ ஃபைலின் முகவரியை கொடுக்கவும்.

 பின்னணியில் இசை ஒலிப்பதால் வாசகர்களுக்கு சலிப்பு ஏற்படலாம்.



வீடியோ ஃபைல்களை இணைப்பது எப்படி என்று இறைவன் நாடினால்  பிறகு பார்ப்போம்.



You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...